சுடச்சுட

  

  முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. 
  வட்டார மருத்துவ அலுவலர் ராணி தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஸ்வர்ணலதா  முன்னிலை வகித்தார்.   முகாமில் ரத்த சோகை வராமல் தடுத்தல், தடுப்பூசி போடுதலின் முக்கியத்துவம் மற்றும் காய்கனிகள், பழங்கள் கீரைகள் மற்றும் சத்து மாவு போன்ற ஊட்டச்சத்து மிக்க பொருள்களை கர்ப்பிணிகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூறும் விதமாக அங்கன்வாடி பணியாளர்கள் நாடகங்கள் மூலம் நடித்து காண்பித்தனர். 
   இதில், பங்கேற்ற  அனைவருக்கும் முருங்கைக் கீரை டீ மற்றும் சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, அடை தோசை ஆகியவை வழங்கப் பட்டது. இந்த முகாமில்  60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai