குற்றாலம் மறுரூப ஆலயத்தில் 27, 28, 29இல் ஸ்தோத்திர பண்டிகை

குற்றாலம் மறுரூப ஆலயத்தில் 10 சேகரங்களின் 76ஆவது ஸ்தோத்திர பண்டிகை இம்மாதம் 27,  28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

குற்றாலம் மறுரூப ஆலயத்தில் 10 சேகரங்களின் 76ஆவது ஸ்தோத்திர பண்டிகை இம்மாதம் 27,  28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
திருநெல்வேலி திருமண்டிலம் தென்காசி, வடக்கு சீயோன்நகர், பாவூர்சத்திரம், பாவூர்சத்திரம் மேற்கு, புளியங்குடி, சாந்தபுரம், திப்.மீனாட்சிபுரம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, நெடும்பாறை ஆகிய 10 சேகரங்களின் பண்டிகை செப். 27இல் மாலையில் பவனியுடன் தொடங்குகிறது.
திருமண்டில லே செயலர் வேதநாயகம் கொடியேற்றுகிறார். இரவு 7 மணிக்கு ஆயத்த தீபாராதனை நடைபெறுகிறது. அகஸ்தியர்பட்டி சேகரத் தலைவர் பர்ணபாஸ் மறையுரையாற்றுகிறார். 
செப். 28இல் அதிகாலை அருணோதய பிரார்த்தனையில் நெடும்பாறை சேகர குரு பாஸ்கர்சாமுவேல், ஞானஸ்நான ஆராதனையில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஆபிரகாம் ஆகியோர் தேவ செய்தி அளிக்கின்றனர். பின்னர், திருமறைத் தேர்வும், பிரதான ஆராதனையும் நடைபெறும். குருத்துவ காரியதரிசி பீற்றர் தேவதாஸ் மறையுரையாற்றுகிறார்.
இதில், அதிமுக மகளிரணிச் செயலர் விஜிலா சத்தியானந்த் எம்.பி., உப தலைவர் பில்லி, திருமண்டிலப் பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். செப். 29இல் காலை பிரார்த்தனையில் திப்.மீனாட்சிபுரம் சேகர  குரு வினோத் தேவசெய்தி அளிக்கிறார். பிற்பகலில் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் அருள்சாமுவேல் தலைமையில் வருடாந்திர கூட்டம் நடைபெறும். டிடிசிஎம் செயலர் டேவிட் அன்பு பிரபாகரன் இறைசெய்தி வழங்குகிறார். 
ஏற்பாடுகளை தென்காசி சேகரத் தலைவர் ஜெபரத்தினம் மற்றும் சேகர குருக்கள், நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com