"ஜெருசலேம் புனிதப் பயணம்: ரூ. 20,000 நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்'

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வோர் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ. 20 ஆயிரம்   நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வோர் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ. 20 ஆயிரம்   நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கிறிஸ்தவர்கள் 2019-20ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு  நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. 
இப்பயணம் இஸ்ரேல்,  எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது.
இப்பயணம் செப்.2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.  எனவே, புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20' என்று குறிப்பிட்டு ஆணையர்,  சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம் (1ஆவது தளம்), சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வருகிற 30ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிறுபான்மையினர் நல இயக்குநரகம் என்ற முகவரியிலோ அல்லது 044-28520033 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com