மாநில அளவிலான போட்டிகளுக்கு குத்துக்கல்வலசை பள்ளி மாணவர்கள் தேர்வு
By DIN | Published On : 13th September 2019 06:53 AM | Last Updated : 13th September 2019 06:53 AM | அ+அ அ- |

மாநில அளவிலான கையெறிபந்து, இறகுப்பந்து போட்டிகளுக்கு குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கையெறிபந்து போட்டியில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும் தேர்வாகினர். பாளையங்கோட்டை விங்ஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகினார். மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்விக் குழும சட்ட ஆலோசகர் திருமலை, தாளாளர் அன்பரசி, தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜபாண்டி, செல்வம், இசக்கிதுரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள், ஆசிரியர்கள் பாராட்டினர்.