ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ராதாபுரம் கால்வாயில் பேச்சிபாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். 

ராதாபுரம் கால்வாயில் பேச்சிபாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். 
 இது தொடர்பாக அவர் தமிழக முதல்வரிடம் அளித்துள்ள மனு:  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் ஆட்சி காலத்தில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து 48 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. பின்னர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இருக்கும்  போது ராதாபுரம் கால்வாயில் 150 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிடவேண்டும் எனவும் 1970-இல் தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசுஆணையின்படி தண்ணீர் திறந்துவிடவேண்டும். கன்னியாகுமரி மாவட்ட நிலப்பாறை என்ற இடத்தில் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கான மதகு உள்ளது. ராதாபுரம் கால்வாயை நம்பி ராதாபுரம் தொகுதியில் 52 பாசன குளங்கள் உள்ளன.  இந்த குளங்கள் மூலமாக 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிபெறக்கூடியதாக உள்ளது. 
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டால் ராதாபுரம் தொகுதியில் உள்ள லெவஞ்சிபுரம், அழகப்பபுரம், தெற்குகருங்குளம், பழவூர், தணக்கர்குளம், சிவசுப்பிரமணியபுரம், ஆவரைகுளம், ராதாபுரம், பரமேஸ்வரபுரம், கோலியான்குளம், வடக்கன்குளம் உள்ளிட்ட பாசன வசதி பெறுவதோடு இந்த பகுதியில் குடிநீர் தேவையும் நிறைவுபெறும். 
மேலும் கடல்நீர் நிலத்தடியில் ஊடுறுவுவதும் தடுக்கப்படும். தற்போது பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருக்கிறது. எனவே ராதாபுரம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை தீரும் வகையிலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்விடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com