Enable Javscript for better performance
கருவந்தா பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கருவந்தா பள்ளியில் முப்பெரும் விழா

    By DIN  |   Published on : 14th September 2019 09:10 AM  |   அ+அ அ-   |    |  

    சுரண்டை அருகேயுள்ள கருவந்தா விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் தேசிய வாசிப்பு இயக்கம் தொடக்க விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    விழாவுக்கு, பள்ளி நிர்வாகி ஸ்ரீ சாந்தானந்தா சுவாமி தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பாளர் எஸ்.ஐயப்பன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏ.அருணாசலம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நடத்துநர் கோ.வரதராஜன் எழுதிய  "புதிய சிலபஸ்' என்ற நூலை தமிழ்நாடு ராஷ்டிரிய ஸ்வயம் சேவ சங்க நிர்வாகி ஜெ.கோபால்சாமி வெளியிட திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி பி.மாயகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் வழக்குரைஞர் எஸ்.வைத்திலிங்கம்,  அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மாணிக்கம், முன்னாள் ராணுவ வீரர் அகஸ்டின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    பாரத்மாதா கல்வி நிலைய நிர்வாகி வி.வேல்ராஜ் வரவேற்றார்.  கோ.வரதராஜ் ஏற்புரை வழங்கி,  நன்றி தெரிவித்தார்.

    kattana sevai