Enable Javscript for better performance
சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 09:11 AM  |   அ+அ அ-   |    |  

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் எஸ். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் ஆர். கருப்பையா, எம். ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலர் இரா. நடராசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம். ராமசுப்பு, வி. சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
      அனைத்து வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். 14ஆவது வார்டு மற்றும்  சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தைச் சீரமைக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை அனைத்து சாக்கடைகளையும் சுத்தம் செய்யவேண்டும். பேருந்து நிலைய வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவில் இடிந்த பாலத்தை உடனே புதுப்பித்துக் கட்டவேண்டும். கோம்பையாறு குடிநீருக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
     பிறகு, கோரிக்கை மனுவை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுதாவிடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். நிர்வாகிகள் கே.எம். கிருஷ்ணன், குருசாமி, ஜனநாயக மாதர் சங்கச் செயலர் சுப்புலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் பேரவைத் தலைவர் சக்தி, ஆட்டோ ஓட்டுநர் சங்கச் செயலர் சக்திவேல், செ. மாரியப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    kattana sevai