Enable Javscript for better performance
சீவல்ராயனேந்தல் அங்கன்வாடிக்கு சீர்வரிசை- Dinamani

சுடச்சுட

    

    சீவல்ராயனேந்தல் அங்கன்வாடிக்கு சீர்வரிசை

    By DIN  |   Published on : 14th September 2019 09:10 AM  |   அ+அ அ-   |    |  

    சங்கரன்கோவில் அருகே சீவல்ராயனேந்தல் அங்கன்வாடி மையத்துக்கு சீர்பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    குழந்தை உரிமையும்  நீங்களும் அமைப்பு மற்றும் மனித உரிமை கல்வி ஈர்ப்புக் களம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் பரதன் தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பேச்சியம்மாள், மேற்பார்வையாளர்கள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி, தலைமையாசிரியர் புஷ்பராணி, பழனிச்சாமி, அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத் தலைவர் முத்துமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    தொடர்ந்து குழந்தைகள் பயன்படுத்தும் முன்பருவ கல்வி சாதனங்கள், விளையாட்டுப் பொருள்கள், சேர், பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவற்றை அங்கன்வாடி பணியாளர் கிருஷ்ணவேணி பெற்றுக்கொண்டார். 
    ஏற்பாடுகளை மனித உரிமை கல்வி மற்றும் ஈர்ப்புக் களத்தைச் சேர்ந்த ராதா, பரமேஸ்வரி மற்றும் பலர் செய்திருந்தனர்.
     

    kattana sevai