Enable Javscript for better performance
"நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்' புகைப்பட போட்டி: படைப்புகளை அனுப்ப செப்.25 கடைசி- Dinamani

சுடச்சுட

    

    "நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்கள்' புகைப்பட போட்டி: படைப்புகளை அனுப்ப செப்.25 கடைசி

    By DIN  |   Published on : 14th September 2019 09:05 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்படப் போட்டிக்கு படைப்புகளை அனுப்ப இம் மாதம் 25 ஆம் தேதி கடைசி நாளாகும்.
    இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    சர்வதேச சுற்றுலா தினம் இம் மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி அரசு அருங்காட்சியகம் சார்பில், நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்கள் என்ற தலைப்பில் புகைப்படப் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.
    திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள், கோயில்களின் புகைப்படங்கள், அழகிய சிற்பங்களின் புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.  ஒருவர் மூன்று புகைப்படங்கள் வரை அனுப்பலாம். 
    புகைப்படங்களின் அளவு 12 க்கு 18 இன்ச் அளவில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை மட்டும் அனுப்ப வேண்டும்.
     சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பம் உள்ள அனைவரும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தின் இருப்பில் வைக்கப்படும். 
    முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.2 ஆயிரம், ரூ.1,500, ரூ.1000 ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். 
    போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது படைப்புகளை இம் மாதம் 20 ஆம் தேதி முதல் அருங்காட்சியகத்தில் நேரிலோ, காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், எஸ்.பி.அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு அஞ்சல்  மூலமோ அனுப்பலாம். படைப்புகளை அனுப்ப இம் மாதம் 25 ஆம் தேதி கடைசிநாள் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    kattana sevai