Enable Javscript for better performance
வாசுதேவநல்லூரில் கரும்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாசுதேவநல்லூரில் கரும்பு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 09:15 AM  |   அ+அ அ-   |    |  

    வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     2018-2019 அரவைப் பருவத்துக்கான  கரும்பு நிலுவைப் பணத்தை வழங்கவேண்டும்; இதுவரை வழங்கப்படாத நிலுவைத் தொகை முழுவதையும் உடனே வழங்கவேண்டும்; கரும்பு டன் 1-க்கு ரூ. 4,000 வழங்கவேண்டும்; கடந்த ஆகஸ்ட்டில் சிவகிரி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் செப்டம்பர் இறுதியில் 50 சதவீதமும், மீதித் தொகையை நவம்பர் கடைசியில் தருவதாகவும் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி ஆலை நிர்வாகம் நடக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஆலைமட்டத் தலைவர் ரத்தினவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலர் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
    பின்னர், ஆலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அக்டோபர் மாத இறுதியில் கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை போராட்டக் குழுவினர் ஏற்கவில்லை. மீண்டும் போராட்டத்தைத் தொடர்வதாக முடிவு செய்யப்பட்டது.
    இப்போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, உலகநாதன், ராதாகிருஷ்ணன், தேவஆசீர்வாதம், அருண்காந்த், சொரிமுத்து உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp