தாமிரவருணி ஆற்றில் ஒரே நாளில்72 கி.மீ. தொலைவு தூய்மைப் பணி: 9,000 பேர் பங்கேற்பு

தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தூய்மைப் பணியில் 9,000 பேர் பங்கேற்றனர். ஒரே நாளில் 72 கி.மீ. தூரம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தாமிரவருணி ஆற்றில் ஒரே நாளில்72 கி.மீ. தொலைவு தூய்மைப் பணி: 9,000 பேர் பங்கேற்பு


தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தூய்மைப் பணியில் 9,000 பேர் பங்கேற்றனர். ஒரே நாளில் 72 கி.மீ. தூரம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி கடந்த மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் இரு தினங்கள் இயந்திரங்கள் மூலம் ஆற்றைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. மூன்றாவது நாளான சனிக்கிழமை ஒருங்கிணைந்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில்,  மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 9 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சீவலப்பேரியில் தொடங்கி வைத்தார். தன்னார்வலர்களுடன் இணைந்து ஆட்சியரும் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  திருநெல்வேலி மாவட்டத்தின் புண்ணிய  நதியான தாமிரவருணி ஆற்றில், கடந்த இரு தினங்களில் 100-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கரையை பலப்படுத்துதல்,  முள்புதர்களை அகற்றுதல், அமலைச் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவது நாளில் (சனிக்கிழமை) கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என 9,000 பேர் மூலம் ஒரே நாளில்  60 இடங்களில் 72 கி.மீ. தூரத்திற்கு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தூய்மைப் பணியினை மேற்கொண்டுள்ளனர். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உணவு, குடிநீர், கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
சீவலப்பேரி, திருமலை கொழுந்துபுரம், திருவண்ணநாதபுரம், ராஜவல்லிபுரம்,  கல்லிடைக்குறிச்சி  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சார் ஆட்சியர்கள் மணீஷ் நாராணவரே (திருநெல்வேலி), ஆகாஷ் (சேரன்மகாதேவி),  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ஊரக மேம்பாட்டுத்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சக்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com