நெல்லை ரயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு மனு

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி மத்திய ரயில்வே 

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அனுப்பப்பட்ட மனு:  திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் உள்ளன. இதனால் அதிகாரிகளிடம் முறையிட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும், வளர்ச்சிப் பணிகளை அதிகரிக்கவும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், ரயில்  பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய பெட்டிகளுடன் இயக்கப்படும் மும்பை-நாகர்கோவில் விரைவு ரயிலில் புதிய எல்.ஹெச்.பி. பெட்டிகளை இணைத்து தினசரி ரயிலாக மாற்றவும், திருநெல்வேலிக்கு வந்தடையும் நேரத்தை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களை ரயில் முனையமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவிலிலிருந்து ஒரு அதிவிரைவு ரயிலை சென்னைக்கு தினமும் இயக்க வேண்டும். நாகர்கோவிலிலிருந்து திருச்சி, காட்பாடி வழியாக சென்னை செல்லும் வாராந்திர ரயிலை கூடுதல் நாள்கள் இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் மின்சார மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். தாம்பரம்-நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com