Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாட்டாகுறிச்சியில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாட்டாகுறிச்சியில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 23rd September 2019 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் இந்திரா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    பாட்டாகுறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நடைபாதை மற்றும் பொதுபயன்பாட்டுக்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், இந்திரா காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சங்க பொறுப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். மல்லிகா முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார செயலர் அயூப்கான், தாணுமூர்த்தி ஆகியோர் பேசினர். மாரித்துரை, ராமசந்திரன்,லெட்சுமி, தாயம்மாள், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai