Enable Javscript for better performance
கம்பியால் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    கம்பியால் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வள்ளியூர் அருகே கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
    வள்ளியூர் அருகே உள்ள கிழவனேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கேரளத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுப்புலெட்சுமி மனநிலை சரியில்லாதவர். எனவே சுப்புலெட்சுமிக்கு துணையாக சுப்பிரமணியனின் தம்பி மாரியப்பன் (21) வீட்டில் இருந்து கவனித்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மாரியப்பன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சுப்புலெட்சுமி இரும்புக் கம்பியால் மாரியப்பன் தலையில் பலமாக தாக்கிவிட்டாராம்.
    இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai