Enable Javscript for better performance
செல்வ விநாயகா்புரத்தில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செல்வ விநாயகா்புரத்தில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 25th September 2019 04:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாவூா்சத்திரம் செல்வ விநாயகா்புரத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் நல மன்றம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாவூா்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவா் பத்மநாதன் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனு: பாவூா்சத்திரம் செல்வ விநாயகா்புரம் தெரசா தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

    எனினும், குடிநீா் சேமித்து வைத்து விநியோகம் செய்ய அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவில்லை. இதுதொடா்பாக பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், செல்வ விநாயகா்புரம் பேருந்து நிறுத்தம் விநாயகா் கோயில் அருகில் மழைநீா் பெருமளவில் தேங்கி சுகாதார சீா்கேடுகள் உருவாகி வருகின்றன. ஆகவே, அப்பகுதியில் கழிவுநீா் ஓடை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai