Enable Javscript for better performance
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சங்கரன்கோவில் அருகே பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    சங்கரன்கோவில் அருகே ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை மகள் பவித்ரா (19). பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். பாலாஜி பிஇ படித்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி பழகிவந்தார்களாம். இந்நிலையில், பவித்ரா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பாலாஜியிடம் தெரிவித்தபோது அவர் மறுத்துவிட்டாராம். இவர்களது காதலையறிந்த அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் பவித்ராவைத் திருமணம் செய்துகொள்ள பாலாஜியை வலியுறுத்தியும், அவர் மறுத்துவிட்டாராம்.
    இதனால், அதிர்ச்சியடைந்த பவித்ரா, இதுகுறித்து சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து பாலாஜியை கைதுசெய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai