Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் குறைதீர் முகாம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேரன்மகாதேவி சார் ஆட்சியர்அலுவலகத்தில் புதன்கிழமை (செப்.25) நடைபெறுவதாக இருந்த மாற்றுத் திறனாளிகள் குறைதீர் முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
    இதுகுறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 25) மாற்றுத் திறனாளிகள் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் செப். 21 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இம்முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்படும்போது மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai