Enable Javscript for better performance
வன உயிரின வார விழா போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    வன உயிரின வார விழாவையொட்டி, வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    போட்டிகளை திருநெல்வேலி வனச்சரகர் கருப்பையா தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சன் முன்னிலை வகித்தார். வன உயிரின பாதுகாப்பின் அவசியம் என்ற தலைப்பில்  உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) ஹேமலதா பேசினார். 
    தண்ணீருக்குள் உலகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், மனித வன உயிரின மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.
    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். நடுவர்களாக பாக்கியநாதன், நெப்போலியன், செந்தில்பாண்டி, ஜெபசிந்தி, ஹில்டா, ஜமால் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை கந்தசாமி, குமார், வனவர் மதியழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai