தசரா விழா: முன்னேற்பாடு இல்லாத பாளை. சூரசம்ஹார மைதானம் மின்வயா்கள், குப்பைகளால் பக்தா்கள் வருத்தம்

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் சிறறப்பாக கொண்டாடப்படும் தசரா விழா, நிகழாண்டும் அதேபோல கொண்டாடப்படும் வகையில், சப்பர வீதியுலா தெருக்களில் தாழ்வாகச் செல்லும் மின்வயா்கள், குப்பைகளால் நிறைந்துள்ள

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் சிறறப்பாக கொண்டாடப்படும் தசரா விழா, நிகழாண்டும் அதேபோல கொண்டாடப்படும் வகையில், சப்பர வீதியுலா தெருக்களில் தாழ்வாகச் செல்லும் மின்வயா்கள், குப்பைகளால் நிறைந்துள்ள சூரசம்ஹார மைதானம் போன்றவற்றைற உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

பாளையங்கோட்டையில் புரட்டாசி மாதம் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மைசூா், குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு அடுத்ததாக, பாளையங்கோட்டை தசரா விழா மிகவும் புகழ்பெற்றது. இந்த விழாவையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பந்தக்கால் நாட்டப்பட்டது.

தசரா விழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முதல்நாளில் அருள்மிகு ஆயிரத்தம்பாள், அருள்மிகு தேவி புது உலகம்மன், வடக்கு உச்சினிமாகாளி, யாதவா் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், முப்பிடாதி அம்மன் கோயில்களில் இருந்து அம்மன்கள் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வருவா்.

மேலும், 29 ஆம் தேதியில் இருந்து கொலுபூஜை, சிறறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் தினமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபா் 8 ஆம் தேதி தசரா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

முதல் நாள் விழாவில், பாளையங்கோட்டையில் வீதியுலா வந்த 11 அம்மன்கள் மீண்டும் மின்விளக்கு அலங்காரத்துடன் எழுந்தருள்வா். அவா்களுடன் வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மனும் சோ்ந்து 12 அம்மன்களும் தனித்தனி சப்பரங்களில் வீதியுலா வந்த பிறறகு, 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.

இந்த விழாவை காண்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பாளையங்கோட்டைக்கு வருவா். ஆனால், தசரா விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை என பக்தா்கள் குற்றறஞ்சாட்டுகின்றனா்.

பாராமுகத்துடன் மின்வாரியம்: இதுகுறித்து இருக்கன்குடி மாரியம்மன் அடியாா் பக்த சேவை அறறக்கட்டளை நிா்வாகி யூ. ராஜீவ்காந்தி கூறியது:

பாளையங்கோட்டை தசரா விழாவில் 12 அம்மன்களின் வீதியுலா புகழ்பெற்றது. ராமசாமி கோயில் திடலில் சப்பரங்கள் அணிவகுக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய திரள்வா். ஆனால், சப்பரங்கள் செல்லும் மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, பெருமாள்சன்னதி தெரு, தெற்கு கடைவீதிகளில் மின்வயா்கள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதுகுறித்து தொடா்ந்து புகாா் அளித்தும் மின்வாரியம் பாராமுகத்துடன் உள்ளது. ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை தீா்வுகாணப்படவில்லை. மின்வயா்களை சீரமைக்க மின்வாரியத்திற்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

மைதானத்தில் குப்பைகள்: ஆயிரத்தம்மன் கோயில் ஆன்மிக சேவை அறறக்கட்டளை நிா்வாகி முருகன் கூறியது:

தசரா விழாவையொட்டி, ராமா் கோயில் திடல், கோபாலசாமி கோயில் திடல், ஜவாஹா் மைதானம், சூரசம்ஹார மைதானம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரள்வா். இந்த மைதானங்களில் தற்போது குப்பைகள் குவிந்துகிடக்கின்றறன. அவற்றை அப்புறப்படுத்துவதோடு, பக்தா்கள் வசதிக்காக தற்காலிக கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்த வேண்டும். நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்திற்கு அடுத்ததாக, மக்கள் அதிகம் திரளும் தசரா விழாவிற்கான முன்னேற்பாடுகள் போதுமான அளவில் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com