தடகளப் போட்டி: பழைய குற்றாலம் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

தென்காசி வட்ட அளவிலான தடகளப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

தென்காசி வட்ட அளவிலான தடகளப் போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
தென்காசி வட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையில் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.இதில் அப்பள்ளி மாணவிகள் 15 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் செ.சுஜித்தாமேரி தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.இப்பள்ளி மாணவிகள் 63 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், செயலர் கஸ்தூரிபெல், முதல்வர் ராபர்ட் பென் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com