தென் மண்டல தடகளம்: வடக்கன்குளம்: பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்மண்டல அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

தென்மண்டல அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தென்மண்டல அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர், மாணவிகளில், 14  வயதுக்குள்பட்டோருக்கான பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவர் கே.பாலஜீவா முதலிடமும், டிரையத்லான் போட்டியில் பி.விஷ்ணு முதலிடமும், குண்டு எறிதலில் எஸ்.ஸ்ரீ பாலாஜி 2ஆவது  இடமும் பெற்றனர்.
16 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவு ஈட்டி எறிதலில் கே.பண்ணை அலங்கார பாண்டியன் 3ஆவது இடமும், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஆர்.ராமன் முதலிடமும், உயரம் தாண்டுதலில் டி.தேவகார்த்திக் 2ஆவது இடமும் பெற்றனர்.
18 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் பிரிவு நீளம் தாண்டுதலில் பி.பிஷா 2ஆவது இடமும், மும்முறை தாண்டுதலில் முதலிடமும் பெற்றார். 14 வயது பிரிவில் கே.பாலஜீவா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் ஆறுமுககுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com