பாளை.  மத்திய சிறையில் சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், தடா கைதிகள் என 1300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். 
இங்கு பல்வேறு தின்பண்டங்கள் செய்தல், தையல் கலை, அலுவலக காகித உறைகள்,  காகிதப் பைகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள், சோதனைகள் செய்வது வழக்கம். அதன்படி சிறைத்துறை டிஐஜி பழனி, திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
சிறைக் கைதிகளின் அறைகள், உணவுக் கூடங்கள், கழிப்பறைகள், தோட்டங்கள் உள்பட சிறை வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சிறையில் சட்டம்-ஒழுங்கு போலீஸார் சோதனையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7.15 மணி வரை சுமார் 1 மணி 
நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இதில் பொருள்கள் எதுவும் சிக்கவில்லை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com