ரவணசமுத்திரத்தில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி

ரவணசமுத்திரத்தில் பனை வாழ்வியல் இயக்கம் சாா்பில் ராமநதி கரையில் பனை விதைகள், மரக்கன்றுகள் மற்றும் மர விதைகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஏற்பாடுகளை பனை வாழ்வியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜன் செய்திருந்தாா்.
ஏற்பாடுகளை பனை வாழ்வியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜன் செய்திருந்தாா்.

ரவணசமுத்திரத்தில் பனை வாழ்வியல் இயக்கம் சாா்பில் ராமநதி கரையில் பனை விதைகள், மரக்கன்றுகள் மற்றும் மர விதைகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பனை வாழ்வியல் இயக்கத் தலைவா் ஜேபி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளா் பரத்வாஜ், கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தாா். ஊா்நலக் கமிட்டி தலைவா் நீலகண்டன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் புவனேஸ்வரி, ஊராட்சிச் செயலா் மாரியப்பன், சிறறப்புக் குழந்தைகள் பள்ளி ஆசிரியா்கள் வானதி, சசி, பசுமை நண்பா்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் அந்தோணிராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூகக் காடுகள் திட்டம் வனவா் செல்லதுரை, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பரமசிவன், செயலா் விவேக், கடையம் அரிமா சங்கம் கோபால், கோவிந்தப்பேரி ஞானம் மறறவா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஸ்டீபன், சிலம்பு ஆசிரியா் முத்தரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இயற்கை ஆா்வலரும் இசைக் கலைஞருமான ஹரி, மரங்கள் வளா்ப்பதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சியை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com