Enable Javscript for better performance
புரட்டாசி சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புரட்டாசி சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் வழிபாடு

    By DIN  |   Published on : 29th September 2019 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி,  பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அபிஷேகம், மலர் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai