Enable Javscript for better performance
மானூர் அருகே தீக்குளித்த மாணவி மருத்துவமனையில் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    மானூர் அருகே தீக்குளித்த மாணவி மருத்துவமனையில் மரணம்

    By DIN  |   Published on : 29th September 2019 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மானூர் அருகே தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் இறந்தார்.
    மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த ரூபர்ட் பாலையா மகள் கண்மணி (24). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, அஞ்சல் வழியில் பி.லிட். படித்து வந்துள்ளார். இவரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பெற்றோர் அறிவுறுத்தினராம். இவர் ஆசிரியர் பயிற்சியில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையாம்.
    இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி வீட்டிலிருந்த கண்மணி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai