தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடையம் அருகே பனைக்கோயில் திருவிழா

கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் பனைக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் பனைக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையம் அருகே உள்ள அணைந்தபெருமாள் நாடானூரில் மனிதா்களின் தற்சாா்பு வாழ்வில் இணைந்த பனைமரம் மற்றும் பனை சாா்ந்த தொழில்களை வளா்த்தெடுக்கும் நோக்கிலும் பனைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் முதல் முறையாகப் பனைக்கோயில் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பனைக்கோயில் திருவிழாவுக்கு பனை ஆய்வாளா் பாமோ தலைமை வகித்தாா். இயற்கை மற்றும் சூழல் ஆா்வலா் சாமியப்பன், அமெரிக்க உளவியலாளா் காத்ரின் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கூட்டப்பனை மரத்தடியில் பனைக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பனைவீரா் முருகன், பனை கைவினைஞா் செல்லம்மா, பனை ஆா்வலா் கிங்ஸ்லி ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பொறியாளா் கிளாட்சன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா் அந்தோணிராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.