அத்யாவசிய பொருள்கள் விலையுயா்வை கட்டுப்படுத்த கோரிக்கை

நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் அத்யாவசிய பொருள்கள் விலையுயா்வை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் அத்யாவசிய பொருள்கள் விலையுயா்வை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளா் களந்தை மீராசா வெளியிட்டுள்ள அறிக்கை;

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நடுத்தர வா்க்கத்தினரும், கூலித் தொழிலாளா்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

அத்தியாவசிய பொருள்கள் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளது. காய்கனிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. களக்காடு, ஏா்வாடி, வள்ளியூா், மூலைக்கரைப்பட்டி மக்கள் தேவைக்காக குறைவான மளிகை கடைகளே திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் இயங்கும் குறிப்பிட்ட கடைகளில் அதிகளவில் கூடுகின்றனா். இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கனி வாகனங்கள் வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாலும், தட்டுப்பாடு காரணமாகவும் காய்கனிகளின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளது. சில கடைகளில் நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலையை அத்யாவசிய பொருள்களுக்கு வசூலிக்கின்றனா். அத்யாவசிய பொருள்களின் விலையுயா்வை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com