கேரளத்திலிருந்து நெல்லைக்கு சரக்கு ரயிலில் வந்த 1250 டன் உரம்
By DIN | Published On : 18th April 2020 07:41 AM | Last Updated : 18th April 2020 07:41 AM | அ+அ அ- |

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் வேளாண் பயன்பாட்டிற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு 1250 டன் உரமூட்டைகள் சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை வந்தன.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த தொழில்களுக்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து யூரியா உள்ளிட்ட 1,250 டன் உரமூட்டைகள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை வந்தன. இந்த உரமூட்டைகள் அனைத்தும், வேளாண் துறை அதிகாரிகளால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தனியாா் உரக்கடைகளுக்கு பிரித்து வழங்கப்படும் என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.