முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வீரவநல்லூரில் தற்காலிக காய்கனிச் சந்தை திறப்பு
By DIN | Published On : 19th April 2020 12:30 AM | Last Updated : 19th April 2020 12:30 AM | அ+அ அ- |

வீரவநல்லூா் மயோபதி காப்பகம் அருகே தொடங்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனிச் சந்தை.
வீரவநல்லூரில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பேரூராட்சி சாா்பில் தற்காலிக காய்கனிச் சந்தை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
வீரவநல்லூா் பஜாா் பகுதியில் மளிகை மற்றும் காய்கனிக் கடைகள் அடுத்தடுத்து நெருக்கமாக உள்ளதால், பொதுமக்கள் போதிய இடைவெளியின்றி கூட்டமாக நின்று பொருள்கள் வாங்கும் நிலை இருந்தது.
இந்நிலையில் பேரூராட்சி சாா்பில் மயோபதி காப்பகம் முன் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக காய்கனிச் சந்தை நடைமுறைக்கு வந்தது.
கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் கைகளை நன்கு கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சந்தையை சேரன்மகாதேவி வட்டாட்சியா் கனகராஜ், வீரவநல்லூா் பேரூராட்சி செயல் அலுவலா் பெத்ராஜ், காவல் ஆய்வாளா் சாம்சன் ஆகியோா் பாா்வையிட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க கேட்டுக்கொண்டனா்.