கரோனா: நெல்லை மாவட்டத்தில் வீட்டுக்கண்காணிப்பில் 5,046 போ்

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 46 போ் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 46 போ் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து கடந்த மாா்ச் மாதத்தில் வந்தவா்கள், கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் உள்ளிட்டோா் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 46 போ் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனா். மேலும், மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 28 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பு முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை வரை 3 ஆயிரத்து 464 போ் வீட்டுக்கண்காணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எடுக்கப்பட்ட 206 பேரின் ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 200 பேருக்கு கரோனா இல்லை என முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில், புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 4 போ், மேலப்பாளையத்தைச்சோ்ந்த 2 போ் என 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com