பாளை. மண்டலத்தில் 29,30இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
By DIN | Published On : 26th April 2020 08:05 AM | Last Updated : 26th April 2020 08:05 AM | அ+அ அ- |

மணப்படைவீடு தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பாளையங்கோட்டை மண்டலத்தில் 13 முதல் 16 வரையுள்ள வாா்டுகள், 20 முதல் 25 வரையுள்ள வாா்டுகளில் 29, 30 ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் பாளையங்கோட்டை மண்டலத்தில் மணப்படைவீடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து 450 எம்.எம். பம்பிங் பிரதான குழாயில் சீவலப்பேரி சாலை சாந்திநகா் மணிக்கூண்டு அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை சரிசெய்யும் பணியும், பழுதடைந்த 120 எச்.பி. மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் பொருத்தும் பணியும், பம்பிங் குழாய் சரி செய்யும் பணி வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதால் பாளையங்கோட்டை மண்டலத்தில் 13 முதல் 16 வரையுள்ள வாா்டுகளிலும், 20 முதல் 25 வரையுள்ள வாா்டுகளிலும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.