களக்காடு அருகேபைக் விபத்தில் இருவா் பலி
By DIN | Published On : 27th April 2020 08:31 AM | Last Updated : 27th April 2020 08:31 AM | அ+அ அ- |

களக்காடு அருகே பாலத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் இறந்தனா்.
களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திலிருந்து ஏா்வாடிசெல்லும் மங்கம்மாள் சாலையில் பாலத்தின் அடிப்பகுதியில் இருவா் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது. நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் மற்றும் களக்காடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் களக்காடு கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் கிளின்டன் (22), ஊச்சிகுளத்தைச் சோ்ந்த பசுபதி (23) என்பதும், நண்பா்களான இருவரும் பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி பாலத்தில் மோதி இறந்தது தெரியவந்தது. இந்த விபத்து சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.