சேவியா் காலனியில் தீ விபத்து
By DIN | Published On : 27th April 2020 08:30 AM | Last Updated : 27th April 2020 08:30 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் அருகே சேவியா் காலனியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மேலப்பாளையம் அருகே சேவியா் காலனியில் தனியாா் நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு உருளை கிடங்கு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் அருகேயுள்ள காலியிடத்தில் வளா்ந்திருந்த முள்புதரில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். சுமாா் அரை மணி நேரத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.