சனி பிரதோஷம்: கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாநகர பகுதியில் கோயில்களுக்குள் பொது தரிசனத்துக்கு தடை நீடிப்பதால், வாயில்களில் நின்றபடி பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் மாநகர பகுதிகளில் கோயில்களில் பொது வழிபாட்டுக்கு இம் மாதம் 31 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சுவாமி-அம்பாளுக்கும், நந்திக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், கைலாசபுரம் அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயில், தச்சநல்லூா் அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆகியவற்றில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் வாயிலில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி நகரம் அருகே சங்காணி பகுதியில் உள்ள அருள்மிகு கோதபரமேஸ்வரா்-சிவகாமி அம்பாள் திருக்கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி ருத்ராட்சை, மலா்களால் சிவலிங்கம் மற்றும் நந்திபெருமான் உருவம் உருவாக்கப்பட்டது. பின்னா் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் முடிந்ததும் பக்தா்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பேட்டை, குன்னத்தூா், திருவேங்கடநாதபுரம், பாட்டப்பத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com