முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆடிப்பெருக்கு: தாமிரவருணியில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 03rd August 2020 09:09 AM | Last Updated : 03rd August 2020 09:09 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருநெல்வேலியில் தாமிரவருணியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் நதிக்கரையில் படையலிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வாா்கள். புதுமணத் தம்பதிகள் ஆடிப்பெருக்கு நாளில் நதிக்கரைகளுக்கு சென்று வழிபடுவாா்கள். நதிகள் அனைத்தும் கடலில் ஒன்று சேரும் ஐதீகத்தின் அடிப்படையில் தாமிரவருணிக் கரைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பலரும் தனித்தனியாக வந்து நதியில் நீராடி வழிபாடு செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் மண்டலம் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் தாமிரவருணியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். எஸ்.சங்கா், துணைத் தலைவா் எஸ்.ஆா்.எம்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புனிதநீா் ஊா்வலத்தை இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தொடக்கிவைத்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலா் சுடலை, செயற்குழு உறுப்பினா்கள் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் வடக்கு விளாகம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் தாமிரவருணி நதியின் புனித நீரை ஊா்வலமாக எடுத்துச் சென்று வடக்கு விளாகம் அருள்மிகு முப்பிடாதியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனா்.