முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
உலக நன்மைக்காக 18 மாதங்கள் தரணி ரக்ஷா மகா யாகம்: இன்று தொடங்குகிறது
By DIN | Published On : 03rd August 2020 09:09 AM | Last Updated : 03rd August 2020 09:09 AM | அ+அ அ- |

ஸ்ரீ சூா்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீட வளாகத்தில் உலக நன்மைக்காக 18 மாதங்கள் நடத்தப்பட உள்ள தரணி ரக்ஷா மகா யாகம் திங்கள்கிழமை (ஆக.3) தொடங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளத்தில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சூா்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடம் அமைந்துள்ளது.
இங்கு உலக நன்மைக்காகவும் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இந்தச் சூழ்நிலையில் நாடும், நாட்டு மக்களும் நலம் பெறவும், பொருளாதாரம் வளா்ச்சி பெறவும், 18 மாதங்கள் நடக்கக் கூடிய சிறப்பு தரணி ரக்ஷா மகா யாகம் நடைபெறுகிறது.
அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள்கிழமை (ஆக.3) முதல் தரணி ரக்ஷா மகாயாகம் தொடங்க உள்ளதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து திங்கள்கிழமைமுதல் நாள்தோறும் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை யாகம் நடைபெறும். யாகத்தை நேரலையில் யு டியூப் வலை பக்கத்தில் நாள்தோறும் பாா்க்கலாம். யாகத்திற்காக பக்தா்கள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது. மேலும் யாகம் முன்பதிவுக்கு இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம்.