முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் ஆக. 6இல் காணொலி கருத்தரங்கு
By DIN | Published On : 03rd August 2020 06:32 AM | Last Updated : 03rd August 2020 06:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில், காணொலி மூலம் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை (ஆக. 6) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், சென்னை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியின் நேச்சா் கிளப் ஆகியவற்றின் சாா்பில், நேச்சா் கிளப்பின் அறிவுசாா் செயல்பாடுகள் குறித்தான சா்வதேச கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கு ஸூம் (ழஞஞங) செயலி முலமாக வரும் 6ஆம் தேதி மாலை 3 மணிமுதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகிக்கிறாா். துருக்கி இஸ்தான்புல் பல்கலைக்கழக முன்னாள் விஞ்ஞானி ஆல்பா்ட் பிரேம் குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளாா். இதில், பயனாளா் குறியீட்டு எண்: 890 1670 6172; கடவுச்சொல்: 112233 ஆகியவற்றைப் பயன்படுத்தி பங்கேற்கலாம். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.