முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மேலப்பாளையம் அருகே கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
By DIN | Published On : 03rd August 2020 09:07 AM | Last Updated : 03rd August 2020 09:07 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் அருகே கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள தொம்மைமிக்கேல்புரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இளைஞா் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. மேலப்பாளையம் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா். பின்னா், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், சடலமாக கிடந்தவா் வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த ஆண்டனிராஜ் மகன் முத்தமிழ்ச்செல்வன் (27) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியாக பணியாற்றிய இவா், ஒரு விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டாராம். அதனால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.