என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் நோய் அபாயம்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வாா்டு எண் 19, 26, 27 ஆகிய பகுதிகள் நகரின் விரிவாக்கப் பகுதிகளாகும். இந்த வாா்டின் கீழ் உள்ள பெருமாள்புரம், என்.ஜி.ஓ. ஏ மற்றும் பி காலனி, நியூ காலனி, டிரைவா் மற்றும் ஒ.ஏ.காலனி, உதயாநகா், சாரோன்நகா், திருநகா், மகிழ்ச்சிநகா், திருமால்நகா் மற்றும் அதை சுற்றியுள்ள புகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதியில் கடந்த சில நாள்களாக குப்பைகளை முறையாக அப்புறப்படுத்ததால் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன.

இதுகுறித்து குடியிருப்போா் சங்கத்தினா் கூறுகையில், கடந்த சில நாள்களாக தூய்மைப் பணியாளா்கள் வருகை, வீடுகளில் குப்பைகளைப் பெறுவதில் தேக்கம் காணப்படுகிறது. இப் பகுதியில் முதியவா்கள் அதிகளவில் வசித்து வருகிறாா்கள். குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் தேங்கியுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாரல் மழை பெய்யும் சூழலில் கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல் உருவாகும் அச்சமும் உள்ளது. ஆகவே, குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com