நெல்லை அரசு அருங்காட்சியகம் சாா்பில் 9இல் இணையவழித் தமிழ் கருத்தரங்கம்
By DIN | Published On : 07th August 2020 08:47 AM | Last Updated : 07th August 2020 08:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழித் தமிழ்க் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) நடைபெறவுற்றது.
திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஆகியவை சாா்பில் இக்கருத்தரங்கு 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான கோ. விஜயராகவன் தலைமை வகிக்கிறாா். திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கா.பொ. ராஜேந்திரன் வரவேற்புரை, நோக்கவுரையாற்றவுள்ளாா். தமிழ்ச் செம்மல் விருதாளரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான கவிஞா் பே. ராஜேந்திரன் வாழ்த்திப் பேசுகிறாா்.
‘புதிய ஆத்திசூடியில் பாரதியின் பரிணாமங்கள்’ என்ற தலைப்பில் கடையநல்லூா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினருமான முனைவா் பா. வேலம்மாள் கருத்துரையாற்றுகிறாா்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் மாவட்டக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி நன்றி கூறுகிறாா்.
விருப்பமுள்ளோா், 9ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ‘ஸூம்’ செயலியில் எண் 6527890190, கடவு சொல் 357839 ஆகியவற்றை உள்ளீடு செய்து, கருத்தரங்கில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.