175 நாள்களுக்குப் பின் 100 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை நீர்மட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 10 நாள்களாகப் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம்
பாபநாசம் அணை நீர்மட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 10 நாள்களாகப் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 175 நாள்களுக்குப் பின் பாபநாசம் அணை 100 அடியைத் தாண்டியது.

நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை ஜூன் 2ஆம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. 

ஆக. 2இல் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்ததையடுத்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகம் பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் பிப். 19இல் 100.70 அடியாக இருந்த நிலையில் 175 நாட்கள் கழித்து நீர்இருப்பு 100.65 அடியானது.

அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து 3036.23 அடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 804.75 அடியாகவும் இருந்தது. 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்இருப்பு 130.90 அடியாக இருந்தது. 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 73.20 அடியாகவும், நீர்வரத்து 496 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 55 கன அடியாகவும் இருந்தது.

52.50 அடி நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 44 அடியாகவும் நீர்வரத்து 40 கன அடியாகவும் இருந்தது. 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையின் நீர் இருப்பு 80.80 அடியாவும் நீர்வரத்து 339 கன அடியாகவும் வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர் மட்டம் கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 82 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 140.70  கனஅடியாகவும் இருந்தது.

72 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பா நதி அணையில் நீர் இருப்பு 68.57 அடியாகவும் நீர் வரத்து 43 கன அடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர் மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர் இருப்பு முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து  38 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 132.22 நீர்மட்டம் அடவிநயினார் அணையில் நீர் இருப்பு 129.75 அடியாகவும் நீர் வரத்து 68 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: கடனாநதி 7 மி.மீ., குண்டாறு 13 மி.மீ., அடவிநயினார் 2 மி.மீ., செங்கோட்டை., 3 மி.மீ. கடந்த 10 நாள்களாகப் பெய்த மழையால் அணைகள் நிரம்பியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிசான சாகுபடிக்கான பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் பிசான சாகுபடிக்கு காலந்தாழ்த்தாமல் தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com