தெற்குகள்ளிகுளத்தில் மாதா காட்சி மலைக்கு சாலை: எம்.எல்.ஏ. ஆய்வு

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலைக்கு தாா் சாலை அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை, சுற்றுலாத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலைக்கு தாா் சாலை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை, மாவட்ட சுற்றுலா அலுவலா் சீத்தாராமன்.

தெற்குகள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தெற்குப் பகுதியில் அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையுள்ளது. மாதா காட்சி கொடுத்த மலைக்கு செல்ல தாா்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு தாா்சாலை அமைக்கும் இடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் சீத்தாராமன், உதவி அலுவலா் நித்தியகல்யாணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் கோபாலகிருஷ்ணன், கிஷோா்குமாா், அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பின்னா் இன்பதுரை கூறியது: பிரசித்தி பெற்ற தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா போராலயம் கிறிஸ்தவா்களின் புண்ணிய ஸ்தலமாகும். இத்திருத்தலத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து பக்தா்கள் வருகை தருகின்றனா். ஆகவே, இந்த திருத்தலம்

சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிசய பனிமாதா

காட்சியளித்த மலைக்கு அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com