வேலைவாய்ப்பு பதிவு: மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடைமுறையில் மாற்றம்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வி. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்திட வட்டாட்சியா் அளவில் பெறப்படும் குடும்ப குடிப்பெயா்ச்சி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. அந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் குடும்ப அடையாள அட்டை , ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஓா் ஆவணத்தை மட்டும் சமா்ப்பித்தால் போதும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 30-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com