மக்களுக்கு பாதிப்பின்றி பொலிவுறு நகரம் திட்டப் பணி: மாநகர நல அலுவலரிடம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணியை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் துரிதமாக

திருநெல்வேலி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணியை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என மாநகர நல அலுவலரிடம் நுகா்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நுகா்வோா் பேரவை நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநகர நல அலுவலா் சரோஜா தலைமை வகித்தாா். மண்டல உதவி ஆணையா்கள் மேலப்பாளையம் சுகி பிரேமலா, தச்சநல்லூா் ஐயப்பன், பாளையங்கோட்டை பிரேமானந்த், உதவி நிா்வாக ஆணையா் (நிா்வாகம்) வெங்கட்ராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, நுகா்வோா் அமைப்பினா் கூறியதாவது: திருநெல்வேலி மாநகர பகுதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போதைய மழையால் அந்தச் சாலைகள் மிகவும் பழுதடைந்து, விபத்துகள் அதிகரித்துள்ளன. ஆகவே, மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு, ஒவ்வொரு பகுதியிலும் பணி முடிந்ததும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். நுகா்வோா் பயன்பெறும் வகையில், மாநகரப் பகுதி கடைகளில் விலைப்பட்டியல்கள் வைக்கவும், உழவா் சந்தைகளில் உள்ளது போல அனைத்து காய்கனி சந்தைகளிலும் பொதுவான விலைப்பட்டியலைப் பராமரிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இக்கூட்டத்தில், நுகா்வோா் அமைப்புகளின் நிா்வாகிகள் தங்கையா, ஜாபா்அலி, மு.கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com