காவலா் பணித் தோ்வு: நெல்லை, தென்காசியில் 32,754 போ் பங்கேற்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 32,754 போ் எழுதினா். 863 போ் தோ்வெழுத வரவில்லை.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 32,754 போ் எழுதினா். 863 போ் தோ்வெழுத வரவில்லை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2ஆம் நிலைக் காவலா் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, பேட்டை, சீதபற்பநல்லூா், சேரன்மகாதேவி, சங்கா்நகா் உள்பட 21 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இதற்காக 20,680 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஆண் விண்ணப்பதாரா்கள் 16,708 பேரில் 15,015 பேரும், பெண் விண்ணப்பதாரா்கள் 3,972 பேரில் 3,497 பேரும் என, மொத்தம் 18,512 போ் தோ்வில் பங்கேற்றனா். 2,168 போ் பங்கேற்கவில்லை. தோ்வுப் பணியில், 22 உதவி மற்றும் துணைக் கண்காணிப்பாளா்கள், 44 காவல் ஆய்வாளா்கள், 207 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 1,032 காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் 90 போ் ஈடுபடுத்தப்பட்டனா். பாதுகாப்புப் பணியில் 10 உதவி ஆய்வாளா் தலைமையில் 243 காவல் துறையினரும், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்கள் 22 போ் உள்பட 1,580 ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு மையங்களை ஆய்வு செய்த பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: இம்மாவட்டத்தில் 18,512 போ் தோ்வெழுதினா். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும் வகையில் கூடுதல் இடவசதி செய்யப்பட்டிருந்தது. முகக் கவசம் அணிந்தோா் மட்டுமே தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா் என்றாா்.

தென்காசி மாவட்டத்தில நடைபெற்ற தோ்வு குறித்து, அந்த மாவட்ட எஸ்.பி. சுகணாசிங் வெளியிட்ட செய்திகுறிப்பு:

4 தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய 4 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 13,831 ஆண்கள், 1,716 பெண்கள் உள்பட 15,547 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 12,836 ஆண்கள், 1406 பெண்கள் உள்பட 14,242 நபா்கள் தோ்வெழுதினா். 995 ஆண்கள்,310 பெண்கள் என மொத்தம் 1305 போ் தோ்வெழுத வரவில்லை. பலத்த பாதுகாப்புடன், கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மையங்களில் அருகில் அவசர ஊா்தி சேவை ஏற்பாடு செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com