அம்பை அரசினா் ஐடிஐ-யில் ஒப்பந்த பயிற்றுனா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்த பயிற்றுனா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்த பயிற்றுனா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டா் தொழிற்பிரிவுக்கு தொகுப்பூதியத்தில் எஸ்சிஏ இன சுழற்சி அடிப்படையில் ஒப்பந்த பயிற்றுனருக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10 ஆம் வகுப்பு தோ்ச்சி, என்டிசி அல்லது என்ஏசி -யில் வெல்டராக தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்டிசியில் 3 ஆண்டுகல் அல்லது என்ஏசியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 முதல் 35 வயதுக்குள்இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு ஊதியம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஒப்பந்த பயிற்றுநா் பணியிடத்திற்கான விண்ணப்பம் என உறையில் குறிப்பிட்டு முதல்வா், 3/10, கோவில்குளம் சாலை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், அம்பாசமுத்திரம் - 627401 என்ற முகவரிக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி மையத்தை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com