சங்கரன்கோவில் நகராட்சியில் புதிய வாக்காளர்களாக சேர 1712 பேர் விண்ணப்பம்
By DIN | Published On : 15th December 2020 06:51 PM | Last Updated : 15th December 2020 06:51 PM | அ+அ அ- |

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நகராட்சிப் பகுதியில் புதிய வாக்காளர்களாக சேர 1712 பேர் விண்ணப்ப படிவம் அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி சங்கரன்கோவிலில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முறை சிறப்பு முகாம் கடந்த மாதம் 21, 22 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதில் 1103 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இம்மாதம் 12, 13 ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 609 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்தனர்.மொத்தம் 4 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 முதல் 19 வயது வரை 1117 பேரும், 20 முதல் 25 வயது வரை 343 பேரும், 25 வயதுக்கு மேல் 252 பேரும் என மொத்தம் 1712 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்ப படிவம் கொடுத்துள்ளனர்.
இது தவிர திருத்தம், நீக்கம் மற்றும் தொகுதி விட்டு தொகுதி மாற்றம் தொடர்பாக சுமார் 500 பேர் விண்ணப்பப் படிவம் கொடுத்துள்ளனர்.