கிறிஸ்துமஸ், புத்தாண்டு: தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டடத்திற்கான புளூ பிரின்ட் வரைபடம் (6 நகல்), கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான ரசீது,  இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை),  வரி ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு விசாரணை முடிந்தவுடன் தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் ஆன்லைனிலேயே வெளியிடப்படும். தற்காலிக உரிமத்தின் ஆணையை இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம். மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் ஆண்டு உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது.

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெறுபவா்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com