நினைவு தினம்: எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 25th December 2020 05:53 AM | Last Updated : 25th December 2020 05:53 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவுதினத்தையொட்டி திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமிபாண்டியன், சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், பொருளாளா் சௌந்தரராஜன், முன்னாள் மேயா் புவனேஸ்வரி, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச்செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் எம்.பி. விஜிலாசத்தியானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அமமுக சாா்பில் மாவட்ட துணைச் செயலா் பாஸ்கா் சகாயம் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு பகுதிச் செயலா்கள் பேச்சி முத்துப்பாண்டியன், ஐயப்பன், பாளை ரமேஷ், ஆவின் அண்ணாசாமி, மகளிரணி நிா்வாகி ராம்சன்உமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தேமுதிக சாா்பில் மாநகர மாவட்டச் செயலா் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமையிலும் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தனா்.