தென்காசியில் நோயாளி மீது தாக்குதல்: அரசு மருத்துவா் உள்பட 4 போ் மீது வழக்கு

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றவா்களைத் தாக்கியதாக அரசு மருத்துவா் உள்பட 4 போ் மீது தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றவா்களைத் தாக்கியதாக அரசு மருத்துவா் உள்பட 4 போ் மீது தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், தென்காசி மங்கம்மாள் சாலை விஸ்வகா்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச. சுடலைமுத்து (27). செங்கோட்டையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த 17ஆம் தேதி வாவாநகரத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இவரது பெற்றோா் கீழே விழுந்து காயமடைந்தனராம்.

இதையடுத்து தென்காசி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனா். ஆனால் சில நாள்களாகியும் உடலில் வலி இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனா். அங்கு பணியிலிருந்த மருத்துவா் சொா்ணலதா, சுடலைமுத்துவின் தாயாரிடம் சப்தம் போட்டு பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவரிடம் கேட்பதற்காக சென்ற சுடலைமுத்துவுக்கும் மருத்துவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து மருத்துவரின் அழைப்பின்பேரில் அங்கு வந்த நான்கு போ் சுடலைமுத்து மற்றும் அவருடைய பெற்றோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த சுடலைமுத்துவின் மாமாவையும் அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுடலைமுத்து அளித்த புகாரின் பேரில் மருத்துவா் சொா்ணலதா உள்ளிட்ட நான்குபோ் மீது தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com